மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கத்தில் மாதவன் நடித்து வரும் புதிய திரைப்படத்தை முடித்த பிறகு ஜி.டி.நாயுடு படத்தின் வேலைகளை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டை சேர்ந்த மறைந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மாதவன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தை ‘ராகெட்ரி: நம்பி விளைவு’ என்ற பெயரில் இயக்கி நடித்திருந்தார் மாதவன். ராக்கெட்ரி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் வெற்றி அடைந்தது. இதையடுத்து ‘தோகா ரவுண்ட் தி கார்னர்’ என்ற பாலிவுட் படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மித்ரன் ஆர். ஜவகர் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் மாதவன் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
மீடியா ஒன் குளோபல் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அந்த திரைப்படம் தமிழ் நாட்டைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி. நாயுடு வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுகிறது. இதற்காக ஜி.டி.நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்திடம் முறையான அனுமதியை பெற்றுள்ளனர். அவர்களுடன் ஒப்பந்தம் செய்த பின் அந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.
மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கத்தில் மாதவன் நடித்து வரும் புதிய திரைப்படத்தை முடித்த பிறகு ஜி.டி.நாயுடு படத்தின் வேலைகளை தொடங்க திட்டமிட்டு இருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.