நடிகர் ஜீவா கார் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சென்டர் மீடியன் தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.

2 Min Read
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா கார் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சென்டர் மீடியன் தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு..

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் அடுத்த அம்மையகரம் பகுதியில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் சேலம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரினை நடிகர் ஜீவா ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது.. அப்போது அந்த அம்மையகரம் பகுதியில் உள்ள பிரிவு சாலையில் திடீரென யாரோ ஒருவர் அல்லது இருசக்கர வாகனத்தில் யாரோ ஒருவர் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த காரினை கண்ட்ரோல் படுத்திய நடிகர் ஜீவா மேலும் கண்ட்ரோல் படுத்த முடியாமல் அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சென்டர் மீடியன் தடுப்பு கட்டையில் காரின் முன் பக்கம் மோதியது. இதில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆகியோர் லேசான காயங்களுடன் கீழே இறங்கிப் பார்த்தபோது அங்கிருந்தவர்கள் நடிகர் ஜீவாவின் கார் விபத்து ஆனதை கண்டு கூட்டம் கூடினர் அப்போது சிலர் அதனை வீடியோ எடுத்தனர் உடனே ஆத்திரமடைந்த நடிகர் ஜீவா இதுபோன்று வீடியோ எடுக்க வேண்டாம் என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபோட்டு செல்போனை புடுங்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன சேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் ஜீவா உடனடியாக அவரது நண்பர் ஒருவருக்கு போன் செய்து வேறொரு காரில் அவரது மனைவியுடன் சேலம் நோக்கி புறப்பட்டார். மேலும் சேலம் செல்லும் வழியில் தனியார் மருத்துவமனையில் சிறிது சிகிச்சை எடுத்துவிட்டு ஓய்வு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த காரனை பறிமுதல் செய்து சின்னசேலம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த விபத்து எப்படி ஏற்பட்டது இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நடிகர் ஜீவா என்பதால் அந்த பகுதியில் அதிக அளவு இளைஞர்கள் ஒன்று கூடியதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது..

Share This Article
Leave a review