விழுப்புரம் மாவட்டம், அருகே உள்ள அரசமங்கலத்தில் இயங்கி வருகிறது அரசமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்று வருகின்றனர். முற்றிலுமாக விவசாயம் சார்ந்த பகுதி அரசமங்கலம்.
இந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக இருந்த காலம் தாண்டி தற்போது தமிழக அரசு உதவியுடன் சிறந்த கல்வி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பல திறமைகளை உள்ளடக்கி வெளிக்கொண்டு வருவதில் சிறந்தவர்கள்,

அரசு பல்வேறு உதவிகளை தற்போது மாணவர்களுக்கு வழங்கி வரும் நிலையில் கிராமப்புற மாணவர்களின் கல்வியில் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டது. அந்த வகையில் அரசமங்கலத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வரும் நிலையில்,
திரைப்பட நடிகர் தாடி பாலாஜி இன்று அரசமங்கலம் அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை சந்தித்து உற்சாகப்படுத்தினார். மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் அறிவு அடிப்படையில் தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியர்களை முறையான கல்வி கற்க பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அரசு பள்ளியை இப்போது ஒவ்வொரு கிராமம் தோறும் அரசு உருவாக்கி இருப்பது உங்களுடைய நலனுக்காகவே,

எனவே இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். முன்னதாக பள்ளியில் உள்ள ஆவணங்களை பாதுகாக்க நடிகர் தாடி பாலாஜி ஒரு இரும்பு பீரோ வழங்கியிருந்தார். மேலும் அரசு பள்ளிகளில் ஊக்குவிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும்,

அதற்கான உதவிகளை நம்மால் முடிந்த வரை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் நடிகர் தாடி பாலாஜியின் செயலை பார்த்து மகிழ்ந்தனர். தலைமையாசிரியர் எஸ்.கோபு உள்ளிட்ட ஆசிரியர்கள் தாடி பாலாஜிக்கு நன்றி தெரிவித்தனர்.