நடிகன் அரசியல் வாதி ஆகிறான். அரசியல் வாதி நடிகன் ஆகிறான், வியப்பதற்கு ஒன்றும் இல்லை, இரண்டுக்கும் அடிப்படை நடிப்பு என்றார் கவிக்கோ அப்துல்ரகுமான். அந்த வகையில் தொடர்ந்து தேர்தல் வரும் காலங்களில் எல்லாம் நடிகர்களின் அரசியல் பிரவேசம் நடந்து கொண்டே தான் இருக்கிறது.
அப்போது தலைவர்களான அண்ணா, கலைஞர், ஜெயலலிதா, எம்ஜிஆர், சிவாஜி, எஸ் எஸ் ஆர், விஜயகாந்த் காலம் தொட்டு இன்று விஜய் வரை அது நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது. மேலும் கடந்த 2 நாட்களாக நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி புகைப்படத்துடன் நடிகன் அரசியல் வாதி ஆகிறான்.

நடிகன் அரசியல் வாதி நடிகன் ஆகிறான் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. இரண்டுக்கும் அடிப்படை நடிப்பு என்ற வரிகளோடு சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார் தாடி பாலாஜி. ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை.
இங்கே அப்படி இருக்கும் பொழுது நடிகர்கள் என்ன யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அப்படித்தான் சொல்லுகிறது அந்த போஸ்ட். தாடி பாலாஜியின் அரசியல் பிரவேசம் என்ன சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமீபகாலமாக தாடி பாலாஜி நடவடிக்கைகள் மக்களின் நலன் சார்ந்து இருப்பதை நாம் உணர முடியும்.

அப்போது யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களை சென்று பார்ப்பது, அவர்களுக்கு ஆதரவாக நிற்பது, அவர்களுக்காக குரல் கொடுப்பது என்கிற அடிப்படையில் தாடி பாலாஜி செயல்படுவது நேர்மையான ஒரு அரசியல்வாதி போல அவரை வெளிப்படுத்துகிறது. நடிகர்களின் அரசியல் பிரவேசத்தை அள்ளிக்கொள்ள அரசியல் கட்சிகள் எப்போதும் தயாராக இருப்பது உண்டு.
அந்த வகையில் யார் தாடி பாலாஜியை அனைத்துக் கொள்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடையே இருந்து வருகிறது. அப்போது சின்னத்திரை தொலைக்காட்சியில் நகைச்சுவையாக வந்தால் கூட ஆக்கப்பூர்வமான வார்த்தைகளை மக்களுக்கு வழங்குகிற பணியினை தாடி பாலாஜி சமீபகாலமாக செய்து வருவது. அவரின் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளமாக இருக்குமோ என்று என்ன தோணுகிறது.

அப்போது தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் தொடங்கி, தொடர்ந்து அரசியலில் நடிகர்கள் கோலோச்சி வருவதை நாம் பார்த்து வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நடிகர் தாடி பாலாஜியின் அரசியல் பிரவேசம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எந்த கட்சி அழைத்துக் கொள்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
மக்கள் மனதில் இடம் பிடித்த தாடி பாலாஜி போன்றவர்களை இணைத்துக் கொள்ள கட்சிகள் ஆர்வம் காட்டுவதையும் கடந்த கால அரசியலில் நாம் பார்த்து வருகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம் நடிகர் தாடி பாலாஜி அரசியல் வாதி ஆகிறாரா? என்று பார்ப்போம்.