யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை – சுகாதாரத்துறை உறுதி..!

1 Min Read
பாலின விவகாரம் - யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம்

யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

யூடியூபர் இர்பான் வெளிநாட்டில் பரிசோதனை செய்து, தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் இதுதான் என்று அவரது யூடியூப் சேனலில் சமீபத்தில் அறிவித்தார். அந்த வீடியோவை இதுவரை சுமார் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை

இந்த நிலையில், இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்ப உள்ளது. மேலும் காவல்துறையிலும் யூடியூபர் இர்பான் மீது புகார் கொடுக்க உள்ளது.

வயிற்றில் இருக்கும் குழந்தைகளின் பாலினத்தை கண்டறிந்து சொல்லும் நபர்கள் மீது தமிழகத்தில் 7 ஆண்டு வரை சிறை தண்டனை என்பது நடைமுறையில் உள்ளது என குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை

இதனிடையே, பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த விவகாரம் தொடர்பாக யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்துள்ளது. இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று இந்த குழு பரிந்துரை அளிக்கும்.

வெளிநாட்டில் பரிசோதனை செய்து வந்து, தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் இர்பான். இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review