சாலையில் சுற்றிதிரியும் மாடுகளால் விபத்து நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கை தேவை..!

2 Min Read

திண்டிவனத்தில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக அதிக அளவில் மாடுகள் சாலையில் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து மற்றும் பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை நகராட்சி மூலம் பிடித்து அபராதம் போடப்படுகின்றது. இதேபோல் திண்டிவனம் நேரு வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் நேரம், காலம் இல்லாமல் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன. அந்த வழியாக வரும் பொதுமக்களையும் முட்டி துரத்துகின்றது. மாடுகளைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் சப் கலெக்டர் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டவர்களுக்கு தொடர்ந்து புகார் மனு கொடுத்தனர்.

சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்

இதன் தொடர்ச்சியாக நகராட்சியும், சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், தொடர்ந்து மாடுகளை சாலைகளை உரிமையாளர்கள் மேய விடுகின்றனர். நகராட்சியும் மாடுகளைப் பிடித்து ஓ.பி.ஆர் பார்க்கில் ஐந்து நாட்கள் கட்டி வைத்து தீனி போட்டும் சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் யாரும் மாடுகளை மீட்க வரவில்லை என்பதால் நகராட்சியை பிடித்த மாடுகளை விட்டு விட்டது. தற்போதும் திண்டிவனத்தில் உள்ள நேரு வீதி மயிலம் ரோடு, புதுச்சேரி ரோடு, ஈஸ்வரன் கோவில் தெரு உள்ளிட்ட பல தெருக்களில் அதிக அளவில் மாடுகள் உலா வந்து போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இனிமேல் பொதுமக்கள் மாடுகளை சாலைகளில் மேய விட்டால் மாடுகளை பிடித்து ஏலம் இடுவதற்கு நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தனர். பெரிய அளவில் விபத்து ஏற்படுவதற்குள் நகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, வரட்டாண்டி மயிலம் ரோடு ஆகிய பகுதிகளில் பகல் மட்டும் இன்றி இரவு நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையில் படுத்து கிடக்கிறது. இதன் காரணமாக பைக்கில் செல்வோர் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்

ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் மாட்டின் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் அதை பொருட்படுத்தப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் பைக்கில் வந்த போது மயிலம் ரோட்டில் மாட்டின் மீது மோதி கீழே விழுந்த போது அவர் மீது தனியார் பேருந்தின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபோன்ற தினந்தோறும் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, திண்டிவனம், புதுச்சேரி பைபாஸ் சாலை, மயிலம் ரோடு ஆகிய பகுதிகளில் கால்நடைகளால் விபத்துக்கள் நடக்காத நாட்களே கிடையாது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மாடுகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பிடித்து பட்டியல் அடைத்தாலும் உரிமையாளர்கள் வந்து தகராறு செய்கின்றனர்.

இதே நிலை நீடித்து வந்தால் விலை மதிக்க முடியாத மனிதர்களுக்கு கேள்விக்குறியாகி விடும் என நிலை மாறிவிடும். எனவே நாட்டின் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதை தவிர்க்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This Article
Leave a review