உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த இளம் பெண்ணை சரமாரியாக வெட்டி கொலை – 4 பேர் வெறிச்செயல்..!

2 Min Read

சென்னை, அம்பத்தூரில் உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த இளம் பெண்ணை முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

சென்னை மாநகராட்சி, வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் நந்தினி வயது 27. இவருடைய உறவினரான மதன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று மாலை நந்தினி அம்பத்தூர் தொழிற்பேட்டை அடுத்த ஐ.சி.எப் காலனிக்கு சென்றார். அப்போது இறுதிச் சடங்கில் அங்கு முகமூடி அணிந்த படி வந்த 4 பேர் கொண்ட கும்பல் நந்தினியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த நந்தினி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிர் இழந்தார். பின்னர் அந்த கொலையான முகமூடி கும்பல் தப்பி ஓடிவிட்டன. நந்தினி உறவினர்கள் காவல் துறைக்கு தகவல் தெறிவித்தனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனை

இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கொலையான நந்தினி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நந்தினிக்கு திருமணம் ஆகிவிட்டது. அவருடைய கணவர் சதீஷ் தற்போது பாலாஜி என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். எனவே பாலாஜி கொலைக்குப் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் அவரது கூட்டாளிகள் சதீஷின் மனைவியான நந்தினியை வெட்டிக் கொண்றார்களா அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக இந்த கொலை அரங்கேறியதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பத்தூர் காவல் நிலையம்

மேலும் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க அம்பத்தூர் போலிசார் மூன்று தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முகமூடி கும்பலை தேடி வருகின்றனர். உறவினர் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்த இளம் பெண் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம். அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review