விழுப்புரம் மாவட்டத்தில் பிரபல பிரியாணி கடையில் தெரியாமல் ஊசி போன பிரியாணி வழங்கியதாக ஒரு பெண் வாடிக்கையாளர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், நீதிமன்றம் எதிரே பிரபல பிரியாணி கடையில் கூட்டம் ஏராளமாக உள்ள நிலையில், நேற்று பிற்பகல் பெண் ஒருவர் பிரியாணி வாங்க அங்குள்ள பிரியாணி கடை ஒன்றுக்கு சென்றுள்ளார்.
பிரியாணி கடையில் அந்த பெண்ணுக்கு பிரியாணியை பார்சல் செய்து, பின்னர் பார்சல் செய்த பிரியாணியை பெண் ஒருவர் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு எடுத்துச் சென்று உள்ளார். பின்னர் அந்த பிரியாணியை சாப்பிட்ட போது அந்த பிரியாணி ஊசி போயிருந்ததும். திடீரென உடல் உபாதை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஊசி போயிருந்த கண்டதும், ஆத்திரம் அடைந்த பெண் மற்றும் அவருடைய உறவினர்கள் அந்த பிரியாணி கடைக்கு சென்று, பிரியாணி கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் ஊசி போன பிரியாணியை காண்பித்து அந்த பெண் மற்றும் அவருடைய உறவினர்கள் தகராறு செய்தனர். பின்னர் அந்த பெண் பிரியாணி கடை உரிமையாளரிடம் போய் நின்று எதற்காக வாடிக்கையாளர்களுக்கு கெட்டுப்போன பிரியாணியை விற்பனை செய்கிறீர்கள் என்றும் கேட்டு தகராறு ஈடுபட்டனர்.

தகராறில் ஈடுபட்ட பெண், காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளித்தனர். மேலும் அந்த ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தாலுகா போலீசார் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக உணவு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.