ஜஸ்ட் பாஸ் எடுத்த மாணவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு – கேக் வெட்டி கொண்டாடிய ஃப்ரண்ட்ஸ்..!

2 Min Read
ஜஸ்ட் பாஸ் எடுத்த மாணவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு - கேக் வெட்டி கொண்டாடிய ஃப்ரண்ட்ஸ்

வடுவூரில் 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு நண்பர்கள் மாலை அணிவித்து கேக் வெட்டி கொண்டாட்டம். ஊர்மக்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

- Advertisement -
Ad imageAd image

திருவாரூர் மாவட்டம், அருகே வடுவூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அதில் 10ம் வகுப்பில் 83 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

மேல்பாதி கிராமத்தில் ஊர்வலம்

அதில் வடுவூர் மேல்பாதி மன்னையர் தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் படிப்பில் சுமாரான படிக்கும் இந்த மாணவர் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம் என அனைவரும் கூறி வந்த நிலையில் 500-க்கு 210 என பார்டரில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

அப்போது தன் மீது நம்பிக்கை இல்லாத பள்ளி மாணவன் மணிகண்டனை தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் ஊக்கம் அளித்ததின் விளைவாக மணிகண்டன் பார்டர் மார்க்கில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஜஸ்ட் பாஸ் எடுத்த மாணவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு

அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கொண்டாடி வரும் நிலையில் தோல்விகளை தாங்குவது ஒரு சாதனை தான் என அவரது நண்பர்கள் மாணவர் மணிகண்டனுக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி இருசக்கர வாகனத்தில் மேல்பாதி கிராமத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

ஊர்மக்கள் மணிகண்டனுக்கு சால்வை அணிவித்து செல்போனில் படம்

அப்போது ஊர்மக்களும் மணிகண்டனுக்கு சால்வை அணிவித்து செல்போனில் படம் பிடித்துள்ளனர். மனித வாழ்வில் வெற்றி என்பது வந்து போவது தான் வெற்றியை கண்டு மிதக்காமல் இருப்பதும், தோல்வியை கண்டு துவண்டு போவதும் மனித வாழ்வில் கூடாத ஒன்று.

ஜஸ்ட் பாஸ் எடுத்த மாணவருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு – கேக் வெட்டி கொண்டாடிய ஃப்ரண்ட்ஸ்

அந்த வகையில் பார்டர் மார்க்கில் தேர்ச்சி பெற்ற மணிகண்டனை கொண்டாடிய நண்பர்களும் பாராட்டுக்கு உரியவர்களே.

பார்டர் மார்க் எடுத்த மாணவன் மணிகண்டனுக்கு கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review