கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை நரசிம்ம நாயக்கன்பாளையம் சென்ட்ரல் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் ஜீவநாத். இவர் கடந்தாண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் பீஜி படிப்புக்காக சென்றுள்ளார்.
இந்நிலையில் திடீரென கடந்த புதன்கிழமையன்று ஜீவநாத் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்க பட்டுள்ளார்.
இந்த தகவல் ஜீவநாத் பெற்றோர்களுக்கு இந்த தகவல் தெரிய வந்ததை அடுத்து சம்பவத்தை கேள்விபட்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ஜீவ்நாத் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து இன்னும் முறையான தகவல் லண்டன் போலீசார் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. மாணவர் ஜீவ்நாத் குளிக்க சென்ற போது விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என எந்த தகவலும் முறையாக வரவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் தற்போது பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஜீவ்நாத் உயிரிழப்பு குறித்து லண்டன் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருவதால் அவரது உடல் லண்டனில் தான் உள்ளது. லண்டன் போலிசார் விசாரணை முடித்த பிறகே அவரது உடல் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.