- வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து தாக்கி தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 5 பேரை கைது செய்து உள்ள காவல் துறையினர் கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்த இரு சக்கர வாகனத்தை கல்லணை கால்வாய் ஆற்றில் இருந்து மீட்டனர்.மேலும், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம் உள்ளிட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தஞ்சை அருளானந்த நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் சேது காசி 70 வயது மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக முதல் தளத்தில் தூங்கி கொண்டு இருந்தார்
கடந்த மாதம் 16ம் தேதி நள்ளிரவு சேது காசி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர்.
சத்தம் கேட்டு முதல் தளத்தில் இருந்து இறங்கி வந்த மூதாட்டி சேது காசியை தாக்கிய மர்மநபர்கள் அவர் அணிந்து இருந்த வைரத்தோடு. தங்க செயின் உள்ளிட்ட பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர்.
இதுக்குறித்து சேது காசி தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து. கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பாலமுருகன், கபினேஷ், ராஜா, பிரபாகரன், முத்து ஆனந்த் ஆகிய 5 பேரை கைது செய்த காவல்துறையினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் . தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது.
மேலும், கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்தி வந்த இரு சக்கர வாகனத்தை கல்லணை கால்வாய் ஆற்றில் வீசி சென்றதும் தெரிந்தது.
இதனை அடுத்து, மூதாட்டி சேது காசியிடம் கொள்ளை அடித்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தோடு உள்ளிட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்து, கொள்ளையர்கள் ஆற்றில் வீசி சென்ற இரு சக்கர வாகனத்தையும் மீட்டனர்.