- மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளுக்கும் கருத்துகளை தெரிவிப்பதற்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதன் அடிப்படையில் ஒவ்வொரு விவசாயிகளும் தங்களுடைய குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிப்பார்கள்.
சுகுமார் என்ற விவசாயி தலைமையில் வந்த விவசாயிகள் நேரடியாக ஆட்சியரிடம் மனு அளித்து குறைகளை தெரிவித்ததால் மற்ற விவசாயிகள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். விவசாய குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் போதெல்லாம் சுகுமார் என்ற விவசாயி ஏதாவது ஆர்ப்பாட்டம் – போராட்டம் செய்து கூட்டத்தை முறையாக நடத்து விடாமல் பிரச்சனை செய்வதாக குற்றம் சாட்டிய மற்றொரு தரப்பு விவசாயி ஆட்சியரிடம் இது குறித்து புகார் அளித்தார்.
சுகுமார் தலைமையில் வந்த ஒரு விவசாயி மற்றொரு விவசாயி ஒருவரை தாக்கினார். இதனால் இரண்டு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு மற்றும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விவசாய குறைதீர் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினையும் சமாதானம் செய்து இருக்கையில் அமர வைத்தனர் இந்த சம்பவம் அங்கே இருந்த பரபரப்பை ஏற்படுத்தியது.