ஆரோவில்லில் 5- மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி பலி..!

2 Min Read

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான வானூர் என்ற பகுதியில் நவம்பர் 9 ஆம் தேதி ஆறாவில்லில் 5 வது மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிர்ழ்ந்து போனார்.

- Advertisement -
Ad imageAd image

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான வானூர் என்ற பகுதியில் ஆரோவில்லில் சர்வதேச நகரம் உள்ளது. இந்த ஆரோவில் பகுதியில் வெளிநாடுகள் மற்றும் உள்ளூர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். இந்த ஆரோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் டெல்லியை சேர்ந்த சித்ராஞ்சன் நாயக் என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

இவரது மகள் தாரநாயக் வயது 12. அப்போது ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரங்களில் தாரா நாயக் காற்று வாங்குவதற்கு அடுக்குமாடி குடியிருப்பின் மேலே சென்று ஐந்தாவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது தாரா நாயக் போய் கொண்டிருந்த நிலையில் திடிரென்று அவளுடைய கால் தவறி கீழே விழுந்து, மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

பள்ளி மாணவி தாரா நாயக் கீழே விழுந்ததில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயம் அடைந்து, கீழே விழுந்த இடத்தில் அவளுடைய உடல் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் தாரா நாயக்கின் அவரது பெற்றோர் மற்றும் குடியிருப்பு வாசிகள் இதனை கண்டு, அவளுடைய உடலை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனை கண்ட குடியிருப்பு வாசிகள் காவல் துறைக்கு தகவல் தெறிவித்தனர்.

ஆரோவில் காவல் நிலையம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவளை பரிசோதித்த பிறகு டாக்டர்கள் ஏற்கனவே தாராநாயக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட அவளது பெற்றோர் கதறி கதறி அழுதனர். இந்த 5- மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி மாணவியின் சம்பவம் குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த மாணவி இறந்தது குறித்து தகவல் அறிந்து வந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a review