ஊராட்சி நிர்வாக அலட்சியத்தால் மூலை காய்ச்சல் தாக்கி பள்ளி மாணவன் பலி..!

2 Min Read

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஊராட்சி நிர்வாக அலட்சியத்தால் மூலை காய்ச்சல் தாக்கி பள்ளி மாணவன் பலி.

- Advertisement -
Ad imageAd image

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மேட்டமலையை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பட்டாசு ஆலையில் கூலி பணியாளர் வேலை செய்து வருகிறார். இவரது மகன் நிதீஸ்குமார் வயது (10) , இவர் மேட்டமலையில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அதனால் விருதுநகர் மாவட்டம், அருகே சாத்தூர் தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.

இறந்து போன சிறுவனின் வீடு

அப்போது அந்த சிறுவனுக்கு காய்ச்சல் குறையாததால் மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக மகன் நிதிஸ்குமாரை விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அங்கு அந்த சிறுவனை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் சிறுவனுக்கு, மூலை காய்ச்சல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாணவர் நிதிஷ் பரிதாபமாக பலியானார்.

அதனை தொடர்ந்து பலியான பள்ளி மாணவரின் காய்ச்சலுக்கு காரணம். வீட்டின் அருகே அதிகளவில் பன்றிகள் வளர்பதை காரணம் என தெரிவிக்கின்றனர். ஆகவே ஊராட்சி நிர்வாகம் கிராம பகுதியில் வளர்க்கும் கால்நடைகள், அப்பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

எங்கள் பகுதியில் வசிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் காய்ச்சல் பரவ கூடாது. அதனை பரவுவதற்கு முன்பாகவே ஊராட்சி நிர்வாகம் பன்றிகளை ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

இது குறித்து பலியான மாணவனின் தாய் சித்ரா கூறியதாவது, எங்கள் வீடு அமைந்துள்ள பகுதியில் அதிகளவில் பன்றிகள் வளர்த்து வருகின்றனர். இந்த பன்றிகளால் சுகாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் எனது இரண்டாவது மகனுக்கு மூலைகாய்ச்சல் ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்து, மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது போல எங்கள் பகுதியில் அதிகமாக குடியிருப்பு குடும்பங்கள் வசிக்கும் மற்ற குழந்தைகளுக்கும் மூலை காய்ச்சல் பரவ கூடாது. அதனை பரவுவதற்கு முன்பாகவே ஊராட்சி நிர்வாகம் பன்றிகளை ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Share This Article
Leave a review