நர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டல். கல்லூரி மாணவர் போக்சோவில் கைது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு தண்டனை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு புதிய சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா என்பது பெண்கள், குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க வழிவகுக்கிறது. இந்தியாவில் குற்றம் செய்பவர்கள் மீது ஐபிசி எனும் இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPc), இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) உள்ளிட்டவற்றின் மூலம் தண்டிக்கப்பட்டு வருகின்றன. இந்த புதிய மசோதா என்பது இதற்கு மாற்றாக உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே ஆவலூர் கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், திருவெண்ணைநல்லூரில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே பு. கொணலவாடி கிராமத்தை சேர்ந்த கோயம்புத்தூர் அரசு கல்லூரியில் படித்து வரும் நாகராஜன் மகன் அன்பழகன் வயது 21 என்ற வாலிபரை கடந்த ஒரு வருடமாக மேற்கண்ட கல்லூரி மாணவி காதலித்து வந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி அன்பழகன் தனது வீட்டுக்கு கல்லூரி மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக 3 முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இப்போது அதனை செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து வைத்துக்கொண்டு, அன்பழகன் அடிக்கடி இதனை கூறி மிரட்டி வந்துள்ளார். மேலும் கல்லூரி மாணவிக்கு ஒரு திருமண ஏற்பாடு செய்த மாப்பிள்ளையின் தந்தைக்கு இந்த வீடியோ பதிவுகளை அனுப்பி வைத்து மிரட்டி உள்ளார்.

இது குறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜி, போக்சோ சட்டத்தின் கீழ் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தார். அதன்படி பெண்கள், குழந்தைகள் பலாத்காரம் செய்யும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்க இந்த சட்ட மசோதா இடமளிக்கிறது.