தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த நவம்பர் மாதம் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 24 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இதனிடையே இன்று அதிகாலை விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக முன்னதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது அதில், மருத்துவ பரிசோதனையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்திற்கு முன்பு விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திரைப்பட நடிகர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பட்டுக்கோட்டை அருகே ஆம்பலாபட்டு கிராமத்தில் இன்று இரவு பெண்கள் ஒப்பாரி வைத்தும், கருப்பு பேட்ச் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் சாப்பிட்டீங்களா? அனைவருக்கும் உணவளித்து ஓய்ந்து போன கை தான் விஜயகாந்த் கை உட்காரா யார்ரா அவன் என்ற அதட்டலின் ஆளுமையாக இருக்கட்டும், என்னடா பெரிய பணம் விட்றா பாத்துக்கலாம் என்ற பக்குவமாக இருக்கட்டும் அது கேப்டன் விஜயகாந்த்திடம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் திரைப்பட இயக்குனர் சற்குணம் பேட்டி; திரைப்பட நடிகரும் திரைப்பட நடிகர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்த விதமாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆம்பலாபட்டு கிராமத்தில் இன்று இரவு பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்து போனால் எப்படி கிராமத்துப் பகுதிகளில் ஒப்பாரி வைத்து தங்களது கண்ணீரை வெளிப்படுத்துவார்களோ? அதேபோல் திரைப்பட நடிகர் கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு ஒப்பாரி வைத்து பெண்கள் தங்களது அஞ்சலியை செலுத்தினர். அதேபோல் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கருப்பு பேட்ச் அணிந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்த் படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இது குறித்து ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ஒரு மனிதநேயம்மிக்க அனைவருக்கும் உணவளித்த மாமனிதனை இழந்து விட்டோம். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்றனர்.

இது குறித்து ஆம்லாபட்டு கிராமத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் சற்குணம் கூறுகையில், சாப்பிட்டீங்களா? அனைவருக்கும் உணவளித்து ஓய்ந்து போன கை தான் விஜயகாந்த் கை. உட்காரா யார்ரா அவன் என்ற அதட்டலின் ஆளுமையாக இருக்கட்டும், என்னடா பெரிய பணம் விட்றா பாத்துக்கலாம் என்ற பக்குவமாக இருக்கட்டும் அது கேப்டன் விஜயகாந்த்திடம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். அப்படிப்பட்ட மாமனிதனுக்கு எங்கள் கிராமத்து மக்கள் சார்பில் இதய அஞ்சலியை செலுத்துகிறோம் என்றார்.