இரவில் கேட்டை தாண்டி வீட்டு வளர்ப்பு நாயை விரட்டி செல்லும் சிறுத்தை..!

2 Min Read

நீலகிரி மாவட்டம், குன்னூரில் இரவில் ஒரு வீட்டில் கேட்டை தாண்டி, வீட்டு வளர்ப்பு நாயை வேட்டையாட விரட்டி செல்லும் சிறுத்தை விரட்டும் காட்சி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவு. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.

- Advertisement -
Ad imageAd image

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரம் காளியம்மன் கோவில் என்ற பகுதியை சேர்ந்த முருகன் என்பவர், இவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் சிறுத்தை வேட்டையாட ஒரு வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு நாயை விரட்டி செல்கிறது. வன பகுதியில் இருந்து சிறுத்தை உணவு மற்றும் தண்ணீரை தேடி குடிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

நாயை வேட்டையாட விரட்டி செல்லும் சிறுத்தை சிசிடிவி காட்சி

எனவே குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும் என்று நீலகிரி குன்னூர் வனத்துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தேயிலை தோட்டங்களில் பணியாளர்கள் வேலை செய்பவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும், ஆடு, மாடு மேய்பவர்களும் கவனமுடன் இருக்க வேண்டுமென நீலகிரி மாவட்டம், குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் என்பவர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

நாயை வேட்டையாட விரட்டி செல்லும் சிறுத்தை சிசிடிவி காட்சி

இதனை தொடர்ந்து வழக்கம் போல் நேற்று இரவு தேயிலை தோட்டத்தில் இருந்து வந்த சிறுத்தை, குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து ஒரு வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்து வளர்ப்பு நாயை வேட்டையாட செல்லும் சிறுத்தை விரட்டும் காட்சி பொருத்தப்பட்டிருந்த CCTV. கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் சிறுத்தையை வனதுறையினர் கூண்டு வைத்து பிடிக்க வில்லை என்றால், இப்பகுதியில் உயிர் சேதம் ஏற்படும் என்றும், விரைவில் குன்னூர் வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பின்னர் குன்னூர் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தை பிடித்து, வனபகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Share This Article
Leave a review