சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 42 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளிக்கு 42 மாதம் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் புது காலனியை சேர்ந்தவர் பாவாடை வயது 58. இவர் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அதே பகுதியில் அருகில் உள்ள வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது 12 வயது சிறுமி.

பாவாடை என்பவர், அந்த சிறு வயது சிறுமியை பார்த்து, 12 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து பாலியல் செய்த சிறுமி, அவரது பெற்றோரிடம் கூறிய தகவலின் பேரில், அந்த சிறுமியின் பெற்றோர் அருகில் உள்ள விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளியான பாவாடையை போலிசார் தேடி வந்தனர். இதனை தொடர்ந்து போலிசார் குற்றவாளியான பாவாடை வலைவீசி பிடித்து, கைது செய்தனர்.

மேலும் போலீசார் அவர் மீது விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் போக்சோ பிரிவில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜராகினார். 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாவாடைக்கு 42 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 23 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழுப்பீடாக ரூபாய் 1.50 லட்சம் அரசு வழங்க உத்தரவிட்டார்.