ஏலகிரியில் திடீரென பறந்து வந்து தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு..!

2 Min Read

ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரை இறங்கியதால் பெரும் பரபரப்பு. போலீசார் விசாரணை. புதுமண தம்பதிகளை அழைத்து செல்வதற்கு வந்ததாக தகவல்.

- Advertisement -
Ad imageAd image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சுற்றுலாத்தலமான ஏலகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் நிலையில் இதுவரை பேருந்துகளையும் இலகுரக வாகனங்களையும் மட்டுமே பார்த்த அப்பகுதி மக்களுக்கு அத்தனாவூர் பகுதியில் இயங்கும் பிரபல டான்போஸ்கோ கல்லூரிக்கு சொந்த இடமான நிலத்தில் திடீரென ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்து இறங்கியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

ஏலகிரியில் திடீரென பறந்து வந்து தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் ரத்னா ஜெயின் வயது (50). இவருடைய மகனுக்கு திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமணம் வைத்துள்ளார். இந்த நிலையில் பெண்ணையும், மாப்பிள்ளையையும் அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்துள்ளனர். இதன் காரணமாகத் திடீரென ஏலகிரி மலையில் டான் போஸ்கோ கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது.

இதனைக் காண அப்பகுதி மக்கள் கூட்டம் சேர்ந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் ஹெலிகாப்டரை பார்க்க கூட்டம் கூட்டமாக வந்து சென்ற நிலையில் சம்பவம் குறித்து ஏலகிரி காவல்துறை விசாரணை மேற்கொண்ட போது பெங்களூர் பகுதியில் இருக்கும் பிரபல தொழிலதிபரின் இல்ல திருமணம் ஏலகிரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்க கோட்டையில் நடைபெற்றதை தொடர்ந்து புதுமண தம்பதிகளை அழைத்து செல்வதற்காக ஹெலிகாப்டர் வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஏலகிரியில் திடீரென பறந்து வந்து தரை இறங்கிய ஹெலிகாப்டரால் பரபரப்பு

தனியார் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் ஹெலிகாப்டர் இறங்கி இருந்தாலும், இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும் எனக் கல்லூரியின் முதல்வர் போஸ்கோ அகஸ்டியனிடம் போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது எனவும் கல்லூரியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போலீசார் விசாரணை

மேலும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திடமும் அல்லது மாவட்ட போலீசாரிடமும் முறையான அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென வந்து தரையிறீங்க ஹெலிகாப்டரால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Share This Article
Leave a review