சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் வந்து கொண்டியிருந்த காரில் திடீரென புகுந்த நல்ல பாம்பு. பாம்பை கண்டவுடன் ஓட்டுநர் உட்பட இருவர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தீயணைப்பு வீரர்கள் காரை பல பாகங்களாக பிரித்தும் போக்கு காட்டிய பாம்பு. ஏமாற்றத்துடன் திரும்பிய தீயணைப்பு துறையினர்.
நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த மயில் சாமி இவரது மகன் ராஜேந்திரன்(45), விவசாயியான இவருக்கு சொந்தமான மாருதி சுசுகி ஷிப்ட் சொகுசு கார் ஒன்று உள்ளது.இந்த காரில் ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகிய இருவரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள கார் பழுதுபார்க்கும் இடத்திற்க்கு தனது காரை பழுது பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

காரை மணிகண்டன் ஓட்டி சென்றுள்ளார். அப்போது புதுப்பேட்டை பகுதியில் கார் சென்றபோது கார் உள்ளே திடீரென ஏதோ தென்படுவது போல் இருந்தது. என்ன என்று பார்த்த போது காரின் முன் பகுதியில் நான்கடி நீளமுள்ள பாம்பு வெளியே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், மற்றும் ராஜேந்திரன் காரை சாலையின் ஓரத்தில் அவசரமாக நிறுத்திவிட்டு இறங்கி ஓட்டம் பிடித்து அங்கிருந்து தப்பினார்.
பின்னர் இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்தனர் தீயணைப்பு துறையினர். காரின் பல பகுதியில் தேடினர். இந்த நிலையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பாம்பு கிடைக்கவில்லை. தீயனைப்பு வீரர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் பாம்பை பிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீச் அடித்தும் பார்த்தனர் பாம்பை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது. பாம்பு கிடைக்காத ஏமாற்றத்தில் தீயணைப்பு துறையினரும் ஏமாற்றத்துடன் திரும்பச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.