திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த மோரை வீராபுரம், ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் சௌபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டானியா அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.
இவருக்கு முதல்வர் உத்தரவின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் டானியா திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவ செலவிற்காக நீதி வழங்குவதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனது இருக்கையில் சிறுமி அமர செய்து. நேற்று முன்தினம் சிறுமியின் பிறந்தநாளையோட்டி கேக் வெட்டி கொண்டாடினர்.
பின்னர் மருத்துவ செலவிற்காக ரூபாய் 50,000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
சிறுமியை அழைத்து தனது இருக்கையில் அமர வைத்து பேசிய மாவட்ட ஆட்சியரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிறுமி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு காணொளி வெளியிட்டு இருந்தார் அந்த காணொளியில் தமிழகத்தில் அவர் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது