திருவள்ளூர் மாவட்டம், அருகே பேரம்பாக்கம் அருகே உள்ள கடம்பத்தூர் கிடங்கு தெருவில் உறவினர் ஒருவர் இறந்ததால், அந்த தெருவில் இருக்கும் கடைகளை அடைக்ககோரி கடை உரிமையாளர்களை கத்தியில் கொண்டு தாக்கி ரகளையில் ஈடுப்பட்ட ரவுடி கும்பல். போலிசார் கைது.

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகே உள்ள கடம்பத்தூர் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மயில்வேல் (வயது 51). இவர் சமையல் மாஸ்டர் ஆவார். மேலும் கடந்த 7 ஆம் தேதி அன்று மயில்வேல் சத்தரை பகுதியில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி பலியானார். இதை தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நரசிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்றது. அப்போது நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த முகிந்தர், அமர்நாத் என்கின்ற முகிந்தர் மற்றும் வினோத் குமார் என்கின்ற பாபா, பிரவீன் ஆகிய 3 பேரும் உறவினரான மயில்வேல் இறந்த காரணத்தால் அப்பகுதியில் உள்ள கடைகளை மூடுமாறு கூறி ரகளையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவர்கள் நரசிங்கபுரம் பகுதியில் கறிக்கடை ஒன்று வைத்து நடத்தி வந்த வினோத்குமார் என்பவரின் கறிக்கடை மூடுமாறு ரகளையில் ஈடுப்பட்ட ரவுடி கும்பல் கூறி உள்ளனர். அதற்காக அவர் கடையை மூட மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி கும்பல் 3 பேரும் கறிக்கடை உரிமையாளரான வினோத்குமாரை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் இடது பக்க கையில் வெட்டி விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பிச் சென்றனர். வினோத்குமார் இடது பக்க கையில் ரத்தம் சிந்தியது. இதனை கண்ட அவரது குடும்பத்தினர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை திருவள்ளுவர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த சம்பவம் வினோத்குமார் மப்பேடு போலீசாருக்கு புகார் கொடுத்தார். புகாரின் பெரில் போலீசார் இது சம்பந்தமாக முகிந்தர் அமர்நாத் என்கின்ற முகிந்தர், வினோத்குமார் என்கின்ற பாபா, பிரவீன் ஆகிய 3 பேரையும் வலை வீசி பிடித்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன