Madurai : தகாத உறவை தெரிந்து கொண்ட மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தாய்..!

1 Min Read

மதுரை மாவட்டம், அடுத்த மேலூர் அருகே உலகநாதபுரத்தை சேர்ந்தவர்கள் சமயமுத்து – மலர் செல்வி தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமயமுத்து துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image
தகாத உறவு

இந்த நிலையில் நேற்று அவரது தாய், தன் 5 வயது மகள் கார்த்திகா மாயமானதாகக் கூறி தேடி வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாயமான சிறுமி குறித்து தாய் மலர் செல்வியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கள்ளக்காதலன்

போலீசார் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மலர் செல்வி அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருப்பது இளைய மகள் கார்த்திகாவுக்கு தெரியவந்துள்ளது.

மேலூர் காவல் நிலைய போலீசார்

இதனால் மலர் செல்வி, தனது மகள் கார்த்திகாவை கிணற்றில் தள்ளி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து சிறுமியின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகாத உறவை தெரிந்து கொண்ட மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தாய்

இதை தொடர்ந்து தாய் மலர் செல்வி மற்றும் இளைஞர் தர்ம சுந்தர் ஆகிய இருவரிடமும் மேலூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தர்ம சுந்தருக்கு திருமணமாகி (மே-19) 3 நாட்களே ஆனது தெரியவந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a review