- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நாங்குனேரி பகுதியில் உள்ள இடங்களில் யூகலிப்டஸ் மரம் வளர்க்க விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு.
யூகலிப்டஸ் மரங்கள் நிறைய தண்ணீரை உறிஞ்சுபவை என்பது கட்டுக்கதை.- நீதிபதிகள்உண்மையில் இவை மற்ற பயிர்களை விட குறைந்த தண்ணீரையே உரிஞ்சுகின்றன என தேசிய பசுமை தீர்ப்பாய தீர்வுகளும் உறுதிப்படுத்துகின்றன.- நீதிபதிகள்.
யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் 2017-ம் ஆண்டில் தாக்கல் செய்த மனு.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமாக நாங்குனேரி தாலுகா தென்குளம், பருத்திப்பாடு கிராமங்களில் உள்ள சுமார் 1,700 ஏக்கர் நிலங்களில் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்க 2016-ல் குத்தகைக்கு வழங்கப்பட்டு உள்ளது. நாங்குனேரி தாலுகா வறட்சியான பகுதியாகும். அங்கு பெரும் பரப்பளவில் யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால், பொதுமக்கள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திப்பார்கள்.
எனவே குத்தகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காகித நிறுவனம் ஆஜராகிய வழக்கறிஞர்.
சமவெளிகளில் யூகலிப்டஸ் மரங்களின் வேர்கள் 3 மீட்டர் ஆழத்துக்கு மேல் செல்லாது. மேலும் மற்ற வகை மரங்களை விட குறைவான தண்ணீரையே உறிஞ்சுகின்றன என்பதை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆராய்ந்து அறிவித்து உள்ளது என தெரிவித்தார்.
பின்னர் அரசு தரப்பில் நாங்குநேரி தாலுகா முழுவதும் பாதுகாப்பான மண்டலமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அது வறட்சியான பகுதியாக காட்டப்படவில்லை. குத்தகை வழங்கியதில் எந்த விதிமீறலும் இல்லை என வாதாடினார்.விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு.
யூகலிப்டஸ் மரங்களை வளர்த்து அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தில் 30 சதவீதம் நெல்லையப்பர் கோவிலுக்கு வழங்கப்படுகிறது. மேலும் யூகலிப்டஸ் மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படாது என டேராடூன் வன ஆராய்ச்சி மையமும் தெரிவித்துள்ளது.

உண்மையில் இவை மற்ற பயிர்களை விட குறைந்த தண்ணீரையே பயன்படுத்துகின்றன என தேசிய பசுமை தீர்ப்பாய தீர்வுகளும் உறுதிப்படுத்துகின்றன. எனவே, யூகலிப்டஸ் மரங்கள் நிறைய தண்ணீரை உறிஞ்சுபவை என்ற நம்பிக்கை ஒரு கட்டுக்கதையாக தோன்றுகிறது.
சூழலியல், சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். அதே நேரத்தில் நிலையான வளர்ச்சியையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.
அந்த வகையில் 2 வகையான யூகலிப்டஸ் மரங்களை வளர்ப்பதால் தீங்கு ஏற்படுவது பற்றி மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை.
எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
அதேநேரம், எதிர்காலத்தில் சமவெளிப் பகுதிகளில் யூகலிப்டஸ் மரங்களை வளர்க்கத் திட்டமிட்டால், முறையாக ஆய்வு செய்த பின்னரே உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.