கோடியக்கரை கடற்கரையில் , இலங்கைப் கடற்கொள்ளையர்களால் நடத்தப்பட்ட மற்றொரு நடுக்கடல் தாக்குதலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் தாக்கப்பட்டு அவர்களது மீன்பிடி உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது .
செவ்வாய்க்கிழமை மதியம் வானவன்மகாதேவி மீனவ கிராமத்தில் இருந்து மீனவர்கள் பல குழுக்களாக மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
சுப்பிரமணியன் (50) மற்றும் செல்வம் (35) ஆகியோரின் தலைமையில் மொத்தம் ஒன்பது மீனவர்கள் அடங்கிய இரண்டு குழுக்கள், பாயின்ட் கலிமேருக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நான்கு பேர் இரவு 7.30 மணியளவில் அவர்களது படகினை சுற்றிவளைத்துள்ளனர்.
சுப்ரமணியன் மற்றும் நான்கு பேரை அந்த கும்பல் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் . இதுகுறித்து பாதிக்கப்பட்ட சுப்ரமணியன் கூறுகையில் ” மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளில் எங்களை சுற்றிவளைத்த நான்கு நபர்கள் , எங்களிடம் தமிழில் பேசி எங்களது மீன்பிடி உபகரணங்களைக் கொடுக்கும்படி மிரட்டினர் . அவர்கள் எங்களைத் தாக்கி, எங்கள் கைத்தொலைபேசிகள், ஆபரணங்கள், மீன்பிடி வலைகள், ஜிபிஎஸ் இயந்திரம் , பேட்டரிகள் மற்றும் 600 கிலோ எடையுள்ள மீன் பிடிவாலைகளை எங்களிடமிருந்து பறித்துச் சென்றனர் ” .
இரவு 9 மணியளவில், சில மைல்களுக்கு அப்பால் மீன்பிடித்துக் கொண்டிருந்த செல்வம் மற்றும் அவரது குழுவை சேர்ந்த மூன்று நபர்களை தாக்கினர் . அவர்களிடம் இருந்து 40 கிலோ எடையுள்ள மீன்பிடி வலைகள் , நகைகள் மற்றும் உபகரணங்களை பறித்து சென்றனர் .
புதன்கிழமை வனவன்மகாதேவிக்கு திரும்பிய 9 மீனவர்களும் நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . அவர்கள் அளித்த புகாரின் பேரில், வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் அந்த அடையாளம் தெரியாத கடற்கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
கடற்கொள்ளையர்களின் இந்த தாக்குதல்கள் இலங்கைக்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட படகுச் சேவைக்கு பிறகே அதிகரித்துளாக நாகை மீனவ அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளனர் .
படகு சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் என்று தலைவர்கள் தெரிவித்திருந்தனர் . ஆனால் , மீனவர்கள் தாக்கப்படுவதும், கொள்ளையடிப்பதும் தற்போது அதிகரித்துள்ளது . மத்திய அரசு இதற்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்ற வேண்டுகோளையும் மீனவ அமைப்பினர் வைத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.