தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மற்றும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி ஆகியோர் வீடுகளில் அமலக துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய ஒன்பது இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் தொடர்ந்து தற்போது வரை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் கடந்த மாதம் 13ஆம் தேதி சோதனை நடத்தினர். இந்நிலையில், சென்னையில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை 7 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகமாணி ஆகியோர் உள்ள நிலையில், இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை சோதனையில் 70 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமர்க்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பல ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து விழுப்புரம் சென்னை ஆகிய இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று இரவு முழுவதும் சோதனை நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்துள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி அமைத்தது தொடர்பாக பணப்பரிமாற்றம் பற்றி சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.