பென்னாகரம் அருகே கள்ளத்தனமாக மது பாட்டில் விநியோகித்த டாஸ்மாக் ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அடுத்த பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் மேலாளர் மற்றும் விற்பனையாளர் என 7 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் கடந்த சில 1-ம் தேதி இந்த அரசு மதுபான கடைகளில் இருந்து மதுப்பாட்டில்களை வாகனத்தின் மூலம் கள்ளத்தனமாக மதுபானங்கள் கடத்தப்படுவதாக ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பென்னாகரம் காவல்துறை கண்காணிப்பாளர் மகாலட்சுமி உத்தரவின் பெயரில் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல் உதவி ஆய்வாளர் விக்னேஸ் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் சாலை முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜக்கம்பட்டி அரசு மதுபான கடை அருகே யாரோ இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்கள் மூட்டையில் எடுத்து வருவது தெரிய வந்த நிலையில் அந்த வாகனத்தினை நிறுத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முதற்கட்ட விசாரணையில் மது பாட்டில் கடத்தி வந்தவர் பிரச்சாரம்பட்டி பகுதியை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. பின்னர் போலிசார் அவரை கைது செய்தனர். அப்போது போலீசார் விசாரணையை மேற்கொண்ட அவர் வாகனத்தின் மூலம் கொண்டு வந்த மது பாட்டில்களை விநியோகிக்கப்படும் போது அரசால் ஒட்டப்படும் க்யூ ஆர் கோட் இல்லாமல் மது பாட்டில்கள் இருப்பதும், அதனை அரசு மதுபான கடையில் பணிபுரியும் கணேஷ் பிரபு விநியோகித்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அரசு மதுபான கடை விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி கூறியுள்ளார். இந்த மது பாட்டில்களை கள்ளத்தனமாக விநியோகித்த விவகாரத்தில் ஜக்கம்பட்டி அரசு மதுபான கடையில் பணிபுரிய ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஒருவருக்கொருவர் ஒன்றன்பின் ஒன்றாக மாறி மாறி கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அரசு மதுபான கடையில் பணிபுரியும் வேளாளர்கள் ரவி திருப்பதி விற்பனையாளர்கள் சகாதேவன் அதிபதி சரவணன், நாகராஜ் கணேஷ் பிரபு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.