அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 7.5% இடஒதுக்கீடு – தமிழக அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

1 Min Read
  • ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த பூபேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலை பள்ளிகள் இல்லை,அரசு உதவி பெறும் பள்ளிகள் தான் உள்ளன.

இதனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகளை பெற முடியவில்லை. எனவே, ராமநாதபுரம் நகரில் அரசு மேல் நிலைபள்ளி தொடங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராமநாதபுரத்தில் , அரசு மேல்நிலை பள்ளி அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்கட்டது.

இதை தொடர்ந்து நீதிபதிகள் ,மாவட்ட தலைநகராக உள்ள ராமநாதபுரத்தில் , இது நாள் வரை அரசு உயர்நிலைபள்ளி ஏன் அமைக்கவில்லை .ராமநாதபுரத்தில் இருக்கும் மாணவர்கள் அரசு பள்ளிக்கு செல்ல வேண்டும் எனில், 9 km தூரம் செல்ல வேண்டும்.
எனவே , தமிழகத்தில் தாலுகா தலைநகரங்களில் அரசு உயர்நிலை, மேல் நிலை பள்ளிகளை அரசு அமைக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில் அங்குள்ள அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் தமிழக அரசால் வழங்கப்படும் 7.5 சதவீத ஒதுக்கீட்டை, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஏன் வழங்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து பள்ளி கல்விதுறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a review