டிப்பர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு.! பொத்தேரி ரயில்வே கிராசிங்கில் பரபரப்பு.!

1 Min Read
டிப்பர் லாரி

செங்கல்பட்டு: பொத்தேரி அருகே டிப்பர் லாரி மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை அடுத்த பொத்தேரியில் நெடுஞ் சாலையில் அடிக்கடி விபத்து நிகழ்ந்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இன்றைய தினம் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. பொத்தேரி ரயில்வே கிராசிங்கில் இருந்து சாலையை கடக்க முயன்றனர். அப்போது நான்கு இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் சாலையை கடக்க முயன்றனர். அந்த பைக்குகள் மீது நொடிப்பொழுதில் டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்த 6 பேரில் நான்கு பேர் லாரிக்கு அடியில் சிக்கி சிதைந்து போயினர். 3 பேர் படு காயமடைந்தனர்.

டிப்பர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்க் கொண்டுள்ளனர்.

Share This Article
Leave a review