திருநெல்வேலி: நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவரையும், அவரத தங்ககையும் சரமாரியாக வெட்டிய சக மாணவர்கள் 4 பேர் மற்றும் இடை நின்ற மாணவர்கள் 2 பேர் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்கள் 18 வயது முதல் 21 வயதுக்கு விட்டுவிடுவார்கள் என்ற நிலை இப்போது இருக்கிறது. கொடூரமானத தவறு செய்தவர்களுக்கு மட்டுமே அரிதிலும் அரிதாக தண்டனை கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும் என்று அவ்வப்போது பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தார்கள். குற்றத்தின் நோக்கம் மற்றும் குற்றத்தின் வகைகளை பொறுத்து 16 வயதிற்கு மேற்பட்டவர்களை பெரியவர்களாக கருதி கடுமையான தண்டனைகளை விதிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்துள்ளது.

2015 இல் இயற்றப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டப்படி, கொடூரமான குற்றங்களை செய்யும் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களை பெரியவர்களாக எண்ணி விசாரிக்க முடியும். கொலைஅல்லது பலாத்காரம் போன்ற குற்றங்களைச் செய்தால் நிச்சயம் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. இந்த சட்டப்படி கொடூர குற்றம் செய்யும் சிறார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் வீடு புகுந்து பள்ளி மாணவரையும், அவரது தங்ககையும் சரமாரியாக வெட்டிய சக மாணவர்கள் 4 பேர் மற்றும் இடை நின்ற மாணவர்கள் 2 பேர் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
என்ன நடந்தது?:
நாங்குநேரி பெருந்தெரு அம்பிகா – முனியாண்டி ஆகியோரின் மகனான சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சின்னத்துரைவுடன் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள். குறிப்பிட்ட சில மாணவர்கள், அந்த மாணவரிடம் தங்களது புத்தகப் பைகளை சுமக்க வைப்பதும், கையில் காசு வைத்திருந்தால் பிடுங்கிக் கொள்வது தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் தங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலையில் நடத்தி வந்தார்களாம். இதில் மாணவன் சின்னத்துரை கையில் வைத்திருக்கும் காசு மூலமாக அவர்களுக்கு பொருட்களை வாங்கி கொடுப்பதும், ஹோட்டல்களில் வாங்கி தின்றுவிட்டு அதற்கு சின்னதுரையை பணம் கொடுக்க சொல்வதும் நடந்து வந்ததாம்.
தொடர்ந்து நடந்த ஒடுக்குமுறை காரணமாக சின்னதுரை பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கும் சின்னதுரையை தாயார் அம்பிகா ஏன் பள்ளிக்கூடம் செல்லவில்லை என்று கேட்டிருக்கிறார் சின்னதுரை சக மானவர்கள் தன்னை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். உடனே அம்பிகா தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று ஆசிரியரிடம் முறையிட்டு இருக்கிறார். ஆசிரியரும் சின்னதுரையை துன்புறுத்திய குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பி இருக்கிறார் நடந்த எல்லாவற்றையும் கூறி ஆசிரியர் தங்களை எச்சரித்தால் சின்னத்துரையை கொல்ல குறிப்பிட்ட சில மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படியே சின்னதுரையின் வீட்டுக்குள் புகுந்து சின்னதுரையை சரமாரி வெட்டி இருக்கிறார்கள்.

தன் மீது விழும் வெட்டை தடுக்க கைகளைக் கொண்டு தடுக்க முற்பட்ட சின்னத்துரை முயன்றதால் தலையில் ஒரு வெட்டும், வலது கையில் மூன்று வெட்டு, இடது கையில் இரண்டு வெட்டு, தொடை, பாதம் என பல இடங்களில் பலமாக வெட்டி உள்ளார்கள். இதனை தடுக்க சென்ற சின்னதுரையின் சகோதரிக்கும் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வந்த தாத்தாவை தள்ளிவிட்டு இருக்கிறார்கள் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர், இடைநின்ற 2 மாணவர்க்ள் உள்பட கைது செய்யப்பட்ட 6 மாணவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவர்கள் சக மாணவரை ரவுடிகள் போல் செயல்பட்டு கொடூரமாக வெட்டிய சம்பவம் திருநெல்வேலி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.