விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற சப்- இன்ஸ்பெக்டர் வீட்டில் 52 பவுன் நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பாலாஜி என்ற நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் வயது 62. இவர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தனது மனைவி கலைச்செல்வி ஆவார். இவரது மகன் அருண், சுந்தர், மருமகள் ரூபாவதி ஆகியோருடன் ஒரே குடும்பமாக வீட்டில் வசித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியன் வீட்டில் தனது படுக்கை அறையில் உள்ள பீரோவில் மனைவிக்கு சொந்தமான 21 பவுன் நகைகளை வைத்திருந்தார். இதேபோல் மருமகள் ரூபாவதி தனது அருகில் உள்ள பீரோவில் 31 பவுன் நகைகளை வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை பாலசுப்பிரமணியன் தனது மருமகள் ரூபாவதி ஆகியோர் வீட்டில் உள்ள இரண்டு பீரோக்களை திறந்து பார்த்த போது தான், அதிர்ச்சி அடைந்தனர். அதில் வைக்கப்பட்டிருந்த 52 பவுன் நகைகளை மட்டும் காணவில்லை என்று தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் தனது மருமகளாக ரூபாவதி அருகில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். பின்னர் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் போலிசார் விசாரணை நடத்திய போது அந்த பகுதியில் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்களா? அல்லது வெளி நபர்கள் யாரேனும் வீட்டுக்குள் புகுந்து நகைகளை திருடி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள நகைகளை மாயமான சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விழுப்புரம் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவது குடியிருப்போர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவதன் மூலம் இது போல திருட்டு சம்பவங்களை தவிர்க்கலாம். கடந்த சில நாட்களாக செயின் அறுக்கும் சம்பவங்களும் விழுப்புரம் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.