சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.கல்வராயன் மலை, பாலமலை, அருநுத்தமலை,
கரிய கோயில், சேர்வராயன் மலை, ஆகிய மலைப்பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் கரிய கோயில் காவல் எல்லைக்குட்பட்ட நாகலூர் மலைப்பகுதியில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது குப்பன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கள்ள சாராயம் காய்ச்ச ஊறல் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அந்த விவசாய தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது நிலத்துக்கு அடியில் மூன்று பேரல்களில் 500 லிட்டர் கள்ள சாராய ஊரல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து அதனை அதே பகுதியில் கீழே கொட்டி அளித்ததுடன் பொருட்களையும் உடைத்து எறிந்தனர். இதனை தொடர்ந்து தப்பி ஓடிய குப்பன் என்பவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.