5 வயது குழந்தை ராமர்: சோ அவருக்கு தினமும் 1 மணி நேரம் ரெஸ்ட்..!

2 Min Read

அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ராமருக்கு ஓய்வு கொடுக்கும் வகையில்  தினமும் ஒரு மணி நேரம் மூடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது . இதனை தொடர்ந்து , கடந்த 23ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருகைபுரிந்து , தரிசனம் செய்து வருகின்றனர் .

5 வயது குழந்தை ராமர் : 1 மணி நேரம் ரெஸ்ட்

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்த கோவில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற்றது .

பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் தினமும் லட்ச கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குழந்தை வடிவில் இருக்கும் ராமரை காண வருகை புரிந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி

5 வயது குழந்தை ராமர் : 1 மணி நேரம் ரெஸ்ட் : அதிக எண்ணிக்கையில் பக்தகர்கள் திரண்டதால் அதிகாலை 4 மணிக்கு தினசரி பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாள்தோறும் 1 மணி நேரம் கோயில் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், ராமர் கோயில் மதியம் 12.30 மணி முதல் 1:30 மணி வரை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த நடைமுறை நேற்று(16) வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

கோவில் நிர்வாகம்

குழந்தை ராமர் 5 வயது பாலகன் என்றும், அவ்வளவு நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது. எனவே குழந்தை ராமருக்கு ஓய்வு கொடுக்க, இந்த கோவிலின் கதவுகளை சிறிது நேரம் மூடுவதற்கு அறக்கட்டளை முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

Share This Article
Leave a review