நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் $ 5 ஆயிரம் கோடி பண மோசடி – பா.ஜ.க பிரமுகர் 3 பேர் கைது..!

3 Min Read

நியோமேக்ஸ் நிதி நிறுவன பண மோசடி 5 ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் பாஜக பிரமுகர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையே தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும், மாதம் 12 முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாகவும் வெளியான கவர்ச்சி அறிவிப்புகளை தொடர்ந்து பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். ஆனால் முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் 5 ஆயிரம் கோடி வரை நியோமெக்ஸ் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இதன் பேரில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான பாஜக பிரமுகர் வீரசக்தி, கமலக்கண்ணன், பால சுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.

பா.ஜ.க பிரமுகர் கைது

வீரசக்தி மக்கள் நீதி மையம் வேட்பாளராக போட்டியிட்டு பா.ஜ.க கட்சியில் இணைந்துள்ளார் .மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலை உயர்ந்த கார்கள், தங்கம், ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குற்றவாளிகளை கைது செய்ய மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் மற்றும் விசாரணை மேற்கொண்டனர். இந்த நியோமேக்ஸ் வழக்கில் தமிழகம் முழுவதும் 11 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் 92 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை ரூபாய் 17.25 கோடி மதிப்பிலான 752 வங்கி பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டுள்ளனர்.

பா.ஜ.க பிரமுகர் கைது

இந்த நிலையில் நியோமேக்ஸ் நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர்களின் ஒருவரான மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் அவரது சகோதரரும் நியோமேக்ஸ் நிறுவன இயக்குனர்களில் ஒருவரான சிங்காரவேலன் மற்றும் மைக்கில் செல்வி, நடேஷ் பாபு உள்ளிட்ட இயக்குனர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது தவிர நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில் நிறுவனர்களான பா.ஜ.க பிரமுகர் வீரசக்தி, பால சுப்பிரமணியன் ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

மேலும் இவர்கள் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை தொடர்ந்து தனிப்பட்ட தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர் திருச்சியில் வைத்து நியோமேக்ஸ் வழக்கின் தலைமை இயக்குனர்களின் ஒருவரான தலைமுறைவான திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் வீரசக்தி வயது 45 மற்றும் துணைத் தலைவர் பால சுப்பிரமணியத்தின் மகளும் இயக்குனரான லாவண்யா ஆகிய இருவரை கைது செய்தனர். இதற்கிடையில் மதுரை கோர்ட்டில் சரணடைய சென்றபோது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் மனிஷா தலைமையிலான தனிப்படை போலீசார் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் துணைத் தலைவரான பால சுப்பிரமணியத்தையும் சுற்றி வளைத்து நேற்று கைது செய்துள்ளனர்.

நியோமேக்ஸ் நிதி நிறுவன பண மோசடி

இந்த வழக்கில் அடுத்தடுத்து மூவர் கைதாகி இருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கைதான கமலக்கண்ணன் உள்ளிட்டோர் ஜாமின் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். தங்களிடம் கருத்து கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என முதலீட்டாளர்கள் சிலர் கேவியட் மனு தாக்கல் செய்யதிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review