காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் கல்லுரி மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகினறனர் .
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த வசூல் ராஜா. ரவுடி ராஜா மீது 4 கொலை உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் நேற்று காலை வசூல் ராஜா காஞ்சிபுரம் மாநகராட்சி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து நாட்டு குண்டுகளை வீசி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர் .
வெடிகுண்டு சத்தம்கேட்டு சம்பவ பகுதியில் கூடிய பொதுமக்கள் , உடனடியாக இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் .

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் .
குற்ற பின்னணி உடைய ரவுடி வசூல் ராஜா குறித்து போலீசார் தெரிவிக்கையில் ” ஆரம்ப காலங்களில் சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்த ராஜா கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இரட்டை கொலை வழக்கு மூலம் காஞ்சிபுரம் பகுதியில் பிரபலமானார் . தற்போது வசூல் ராஜா மீது 4 கொலை வழக்குகள் , கொள்ளை ஆள்கடத்தல் உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது” . என்று தெரிவித்தனர் .
மேலும் எந்த நேரம் வேண்டுமானாலும் போலீஸ் என்கவுண்டர் தன் மீது பாயலாம் என்று அஞ்சிய ரவுடி ராஜா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருந்தி வாழ முடிவெடுத்து காஞ்சிபுரம் காவல் அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு கடிதம் தாக்கல் செய்துவிட்டு . மேலும் எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் தான் நேற்று பட்டப்பகலில் ரவுடி ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டுள்ளார் .
மேலும் வசூல் ராஜா கொலை வழக்கை விசாரணை செய்துவந்த காஞ்சிபுரம் ADSP தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்ட போது 3 கல்லூரி மாணவர்களை உள்ளடக்கிய கும்பல் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது .
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/kancheepuram-rowdy-vasool-raja-killed-by-throwing-country-made-bomb/
வசூல் ராஜா கொலை வழக்கில் இது வரை 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 இளைஞர்களை கைது செய்துள்ள தனிப்படை போலீசார் அவர்களை ரகசிய இடத்தில வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . விசாரணையின் முடிவில் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.