பத்திரிக்கையாளர் சௌமியா விஸ்வநாதன் கொல்லப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த நிலையில் , டெல்லி சாகேத் நீதிமன்றம் பத்திரிகையாளர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் குற்றவாளிகள் என்று புதன்கிழமை (இன்று) தீர்ப்பளித்தது. இந்த ஐந்து குற்றவாளிகளின் தண்டனையை அக்டோபர் 26 ஆம் தேதி அறிவிப்பதாக டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது .
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி டெல்லி பத்திரிகையாளர் சௌமியா விஸ்வநாதன் பணி முடிந்து நெல்சன் மண்டேலா சாலையில் அவரது காரில் சென்று கொண்டிருந்த போது , ஒரு கும்பலால் வழிமடக்கி சுட்டு கொள்ளபட்டார் .
25 வயதான இளம் பத்திரிகையாளர் சௌம்யா விஸ்வநாதன் , இந்தியா டுடே செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார் . சம்பவம் நடந்த அன்று நெல்சன் மண்டேலா சாலையில் சௌம்யா அவரது காரில் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்தார் .

முதலில் அவர் கார் விபத்தில் இறந்ததாக கருதப்பட்டது , பிறகு அவரது உடல் கூர் ஆய்வின் போது , அவரது தலையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதாய் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர் .
பிறகு CCTV கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது , அவரை ஒரு மர்ம கும்பல் காரில் துருவதும் பிறகு சுட்டு கொன்றதும் தெரியவந்தது .
எனினும் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் சிரமப்பட்டனர் பிறகு 2009 ஆம் ஆண்டு தனியார் நிறுவன ஊழியர் ஜிகிஷா கோஷ் கொலை தொடர்பான விசாரணையின் போது , குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சௌமியா விஸ்வநாதன் கொலையிலும் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்.
குற்றவாளிகள் ரவி கபூர், அமித் சுக்லா, அஜய் குமார் மற்றும் பல்ஜீத் மாலிக் ஆகியோர் சவுமியா விஸ்வநாதனை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் கொலை செய்ததாக டெல்லி நீதிமன்றம் கண்டறிந்துள்ளது .

குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் IPC பிரிவு 302 மற்றும் 34-ன் கீழ் தண்டனை பெற்றுள்ளனர். மேலும் MCOCA இன் பிரிவு 3(1) (i)இன் கீழும் அவர்கள் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது . இதில் ஐந்தாவது குற்றவாளி அஜய் சேத்தி குற்றமிழைத்த வாகனத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்ட குற்றத்திற்காக IPC 411 பிரிவின் கீழ் தண்டனை பெற்றார்.
சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கின் அரசு தரப்பு சாட்சியங்கள் முடிவடைய கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனது குறிப்பிடத்தக்கது.
தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜிகிஷா கோஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட பிறகே இந்த கும்பல் பத்திரிகையாளர் சௌமியாவின் கொலையிலும் தொடர்புடையது கண்டுபிடிக்கப்பட்டது .
2009ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி சவுமியா விஸ்வநாதன் வழக்கில் இந்த ஐந்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாடு (MCOCA) என்ற கடுமையான சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜிகிஷா கோஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரவி கபூர் மற்றும் அமித் சுக்லா ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது, அதை டெல்லி உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது .
சம்பவத்தன்று இரவு, பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த சௌமியா, சுட்டுக் கொல்லப்பட்டார் . குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை தில்லி அரசு , சிறப்பு வழக்கறிஞரை (SPP) நியமித்து வழக்கு விசாரணையை விரைவுபடுத்துவதற்காக சிறப்பு MCOCA நீதிமன்றத்திற்கு மாற்றியது .

பின்னர், அரசு சிறப்பு வழக்கறிஞர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்தே பல திருப்பங்கள் பெற்று வந்த நிலையில் , அரசு தரப்பு சாட்சியங்களை முடிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனது .
ஜிகிஷா கோஷ் கொலை வழக்கு உட்பட பிற கொடூரமான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இந்த குற்றவாளிகளின் கடந்தகால குற்றங்கள் அடிப்படையில் தில்லி காவல்துறை மகாராஷ்டிர ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை (MCOCA) செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது .