ஆந்திர பிரதேசம் மாநிலம் பார்வதி மன்யம் மாவட்டம் காட்ரகடா பகுதியில், விளைநிலத்தில் பயிகளை வனவிலங்குகள் சேதப்படுத்துவதால் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி 4 யானைகள் உயிரிழந்தன. மின்வேலியில் சிக்கிய மேலும் 2 யானைகள் நூலிழையில் உயிர் தப்பின.
ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் ஆந்திரப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில், வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவிலை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் மின்சாரம் தாக்கி 4 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள் அப்பகுதியில் சுற்றித் திரிந்தன. இந்நிலயில் யானைகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் மின்வேளி அமைத்துள்ளனர். இன்று அதிகாலை உணவு தேடி தோட்டத்துக்குள் சென்ற யானைகள் அங்கிருந்த மின்வேலிக்கு அருகே சென்றபோது மின்கம்பியில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தன.
இதையடுத்து சம்பவ இடத்தில் மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து வனத்துறையினர், இறந்த யானைகளின் சடலங்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வனத்துறையினருக்கு பல முறை தகவல் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.