3200 ஆணிகளை வைத்து பிரதமர் மோடியின் படத்தை சலீம் ஷேக் என்ற இளைஞர் உருவாக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சௌராஷ்டிர தமிழ் சங்கமம் இரண்டு பிரதேசங்களின் சங்கமம் மட்டுமல்லாமல், இரு பிராந்தியங்களின் கலை மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவமான சங்கமமாகும். சோம்நாத் சாகர் தரிசனத்தின் பாத்திகா வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 65 கலைஞர்கள்- கைவினைஞர்களின் கலைப் படைப்புகளின் கண்காட்சி மற்றும் விற்பனை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் படத்தை தெளிவான கலைப்படைப்பாக 3200 ஆணிகளைக் கொண்டு அகமதாபாத்தைச் சேர்ந்த கலைஞர் சலீம் ஷேக் உருவாக்கியுள்ளார். பென்சில் மற்றும் தீப்பெட்டி கலைப்படைப்புக்கு பெயர் பெற்றவர், சலீம் ஷேக்.
“நான் எங்கிருந்தும் எந்த விதமான கலைப் பயிற்சியையும் பெறவில்லை. புதுமையான கலைப் படைப்புகளை உருவாக்குகிறேன். பிரதமர் தநரேந்திர மோடி அவர்கள் வடிவத்தை கலைப் படைப்பாகத் தயாரிக்க சுமார் 22 நாட்கள் ஆனது. இந்தக் கலைப் படைப்பின் மூலம் எனது கலையை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார் சலீம் ஷேக்.
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் உருவத்தை பென்சில் வேலைப்பாடுகளால் சலீம் ஷேக் உருவாக்கியுள்ளார். அதையும் இந்த கண்காட்சியில் காணலாம். பார்வையாளர்கள் இந்த கலைப்படைப்புடன் செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். சலீம் ஷேக் அவர்களின் கையொப்பத்தோடு இதுவரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களும் இந்த கலைப்படைப்பில் கையெழுத்திட்டுள்ளனர்.