வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் பலி: முதலமைச்சர் இரங்கல்

1 Min Read
உதயநிதி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

விருதுநகர் மாவட்ட தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கல்குவாரியில் வெடி விபத்து – 3 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழப்பு

இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறப்பட்டவுடன் அரசின் நிவாரண உதவி விரைந்து வழங்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review