மைனர் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனுனுக்கு 204 ஆண்டுகள் சிறைத்தண்டனை .
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனையும் நான்கு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது . குற்றம் சாட்டப்பட்டவர் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள புன்னாலை கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 32) என்பது தெரியவந்துள்ளது .
இதே நீதிமன்றம் முன்னதாக பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் 3 வயது தங்கைக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக வினோத்துக்கு 100 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதியிருந்தது குறிப்பிடத்தக்கது .
இந்த சம்பவம் 2021ல் நடந்தது. பாலியல் சீண்டல்கள் குறித்து இந்த சகோதரிகளின் தாய் பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருந்த போது , அந்த சகோதரிகள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல் குறித்து அவர்களது தாயிடம் தெரியப்படுத்தியுள்ளனர் .
குற்றவாளி வினோத் அந்த சிறுமிகளுக்கு ஆபாசமான காட்சிகளைக் காட்டி சித்திரவதை செய்துள்ளார் . பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் அடூர் போலீசார், 8 வயது சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவரது 3 வயது தங்கையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் .
இவ்வழக்கில் குற்றவாளியான வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணை அனைத்தும் நிறைவுபெற்று, 3 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்த வழக்கில் 100 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது . மேலும் அவரது 8 வயது சகோதிரியை பலாத்காரம் செய்த வழக்கில் நேற்று போக்சோ விரைவு சிறப்பு நீதிமன்றம் 104 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் 4.2 லட்சம் அபராதமும் விதித்து குற்றவாளி வினோத்துக்கு தீர்ப்பு வழங்கியுள்ளது .
அபராதம் செலுத்த மறுத்தால் கூடுதலாக 26 மாதங்கள் சிறை.தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற தீர்ப்பையும் வழங்கியுள்ளது .
பாலியல் குற்றவாளி ஒருவருக்கு 204 ஆண்டு சிறைத் தண்டனையுடன் 4 .2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேசும் பொருளாக உள்ளது .