இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் 2024 மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும். மேலும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

தமிழ்நாடு முழுக்க ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன.
திமுக-வின் 21 வேட்பாளர்கள் பட்டியல்;-
1,தூத்துக்குடி- கனிமொழி,
2,தென்காசி -டாக்டர்.ராணி ஸ்ரீகுமார்,
3,வடசென்னை- டாக்டர் கலாநிதி வீராசாமி,
4,தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன்,

5,மத்தியசென்னை- தயாநிதி மாறன், 6,ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு,
7,காஞ்சீபுரம் – ஜி.செல்வம்,
8,அரக்கோணம்- எஸ்.ஜெகத்ரட்சகன், 9,திருவண்ணாமலை- அண்ணாதுரை,
10,தர்மபுரி- ஆ.மணி,
11,ஆரணி-தரணிவேந்தன்,
12,வேலூர்- கதிர் ஆனந்த்,
13,கள்ளக்குறிச்சி- மலையரசன்,

14,சேலம்-செல்வகணபதி,
15,கோயம்புத்தூர் – கணபதி ராஜ்குமார்,
16,பெரம்பலூர் – அருண் நேரு,
17,நீலகிரி – ஆ.ராசா,
18,பொள்ளாச்சி- ஈஸ்வரசாமி,
19,தஞ்சாவூர் – முரசொலி,

20,ஈரோடு-பிரகாஷ்,
21,தேனி- தங்க தமிழ்செல்வன்,
அப்போது மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக-வின் வேட்பாளர்கள் ஆவார்.