2024 ஐபிஎல் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்..!

2 Min Read
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸை அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக அறிவிப்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மகிழ்ச்சி அடைகிறது.

- Advertisement -
Ad imageAd image

சென்னையில் நடைபெற்ற சிறப்பு விழாவின் போது இந்த கூட்டணி வெளிப்படுத்தப்பட்டது. ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய ஜெர்ஸி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. இதை அடுத்து ஐபிஎல் அணிகள் அதற்கு தயாராகி வருகின்றன.

2024 ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

இந்த முறை சென்னை அணியின் அதிகாரப்பூர்வமாக ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் விமான சேவை நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து அந்த நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட சென்னை அணியின் புதிய ஜெர்ஸி இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இதை அடுத்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 2 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்றனர். சென்னை அணி வீரர்கள் புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தனர். அப்போது 2024 ஐபிஎல் தொடருக்கும் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ரச்சின் ரவிந்திரா, ஷர்துல் தாகூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி உள்ளிட்ட வீரர்கள் சென்னை அணியில் எடுக்கப்பட்டுள்ளனர். சென்னை அணியைப் போன்று மற்ற சில ஐபிஎல் அணிகளின் ஸ்பான்சர்களும் மாறியிருப்பதால் அந்த அணிகளும் விரைவில் தங்களது புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

அப்போது 12-க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கு எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருவது கவனிக்கத்தக்கது. இந்திய சந்தைக்கான எதிஹாட்டின் அர்ப்பணிப்பையும், இந்தியாவின் துடிப்பான சமூகங்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்துகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இது எதிஹாட்டின் உலகத் தரம் வாய்ந்த பயண அனுபவங்களையும், சென்னை சூப்பர் கிங்ஸின் திறமையையும் ஒன்றாகக் கொண்டு வருகிறது. இது ரசிகர்கள் மற்றும் பயணிகளிடையே எதிரொலிக்கும் வெற்றிகரமான கலவையை உருவாக்குகிறது.

Share This Article
Leave a review