வேப்பூரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளை அடித்த சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், அடுத்த வேப்பூர் கூட்ரோடு சர்வீஸ் சாலை அருகே வசித்து வருபவர் பர்ஜில்லா வயது (60). இவர் வேப்பூரில் ஜவுளி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருடன் சேர்ந்து ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பர்ஜில்லாவிற்கு உடல்நிலை பாதிப்பால் கடந்த 21 ஆம் தேதி தனது குடும்பத்துடன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். இதை அடுத்து நேற்று காலை 8.30 மணி அளவில் பர்ஜில்லா மனைவி ரிகானா வேப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ரிகானா வீட்டின் உள்ளே சென்ற போது, சுவரோரம் உள்ள கதவின் பூட்டு உடைந்து திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரிகானா அறையினுள் சென்று பார்த்த போது அங்கிருந்த பீரோ உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் நகையை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

அப்போது இது குறித்து ரிகானா வேப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். பின்னர் திருட்டு மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.