பெங்களூரு வீரபத்ரா நகர் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தனியார் டெப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 18 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.
துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர், அதன் பிறகு ராமலிங்க ரெட்டி அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மோசமாக இருப்பதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் .
தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தீயினால் ஏற்பட்ட புகையால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காட்சி அளித்தது .
எப்படி நடந்தது தீ விபத்து ?
குறிப்பாக இந்த விபத்து அலட்சியத்தின் காரணமாக நடந்திருக்க வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் , இந்த தீ விபத்திற்கான காரணம் தற்போது கண்டறிய பட்டுள்ளதாக தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .
பெங்களூரு மற்றும் ஹொன்னாவரா இடையே இயக்கப்படும் ஸ்ரீகுமார் ட்ராவல்ஸில் இருந்து ஒரு பேருந்து பயணிகளை இறக்கிவிட்டு டிப்போ பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. வெடிங் தொழிலாளி ஒருவர் வாகனத்தில் வெல்டிங் வேலையைச் செய்தபோது,சிறிய தீப்பொறி பெயிண்ட் மற்றும் பாலிஷ் பெட்டியைத் தாக்கி தீயை உண்டாக்கியது . இந்த தீ அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளிலும் பரவி கிட்டத்தட்ட 18 கும் அதிகமான பேருந்துகள் தீயில் எரிந்து நாசமாகின .
13 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த ஆம்னி பேருந்து நிறுத்தம் ஸ்ரீனிவாசா என்பவருக்கு சொந்தமானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஆம்னி பேருந்துகள் நிற்க வைக்கப்பட்ட இடத்திற்கு அறுக்காமலேயே ஒரு குப்பை கிடங்கு அமைந்துள்ளதாகவும் தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .
அவர்கள் டிப்போவில் தீயை அணைக்கும் கருவிகளை வைத்திருக்க வேண்டும். விழிப்புணர்வு குறைபாடு உள்ளது,” என்று அதிகாரி மேலும் கூறினார் . சம்பவம் நடந்த இடம் திறந்த வெளி என்பதால், தீ விபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இதுகுறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குநர் குருலிங்கய்யா கூறியதாவது : “நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசமானது. 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுவரை உயிர்சேதமோ காயமோ யாருக்கும் ஏற்படவில்லை. சம்பவ இடத்தில எளிதில் தீ பற்ற கூடிய நிறைய பொருட்கள் இருந்தன , “என்று குருலிங்கய்யா தெரிவித்துள்ளார் .
வீரபத்ரா நகர் ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .