புதுச்சேரி பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் பெரும் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. புதுவையில் குழந்தைகள் மீதான வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகிறது. பின்வருமாறு;-
புதுச்சேரி, உழவர்கரை பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநரான சதீஷ் பெரியான் வயது 31 என்ற வாலிபர் கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, சிறுமிக்கு துன்புறுத்தல் போன்றவற்றை செயல்களில் ஈடுபட்டு பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் ரேட்டியார் பாளையம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் ரெட்டியார் பாளையம் போலீசார் சதீஷ் பெரியான் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இந்த போக்சோ வழக்கு தொடர்பான விசாரணை புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 14 வயது சிறுமிக்கு பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் பெரியானுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூபாய் 5000 அபராதமும் விதித்து நீதிபதி ஷோபனா தேவி தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு புதுச்சேரி அரசாங்கம் தரப்பில் ரூபாய் 4 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போக்சோ வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜராகி வாதாடினார். ஏற்கனவே இந்த போக்சோ வழக்கில் சதீஷ் பெரியான் ஜாமினில் இருந்து வந்தார். அப்போது கிருமாம்பாக்கத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, சிறுமிக்கு துன்புறுத்தல் போன்றவற்றை செயல்களில் ஈடுபட்டு பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
அந்த வழக்கில் புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் தீர்ப்பில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, சதிஷ் பெரியானை காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை, சிறுமிக்கு துன்புறுத்தல் போன்றவற்றை செயல்களில் ஈடுபட்டு பலாத்காரம் செய்த வழக்கில் சதீஷ் பெரியானுக்கு வாழ்க்கையில் வாழ்நாள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.