இம்மாதம் 12ஆம் தேதி தமாகா கட்சியின் பொதுக்குழு கூட்டம் – ஜி கே வாசன் பேட்டி..!

2 Min Read

இம்மாதம் 12ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.

- Advertisement -
Ad imageAd image

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை தமாகா வரவேற்கிறது. அவர் தன் அறிக்கையில் தெரிவித்தது போல நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் தான் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது என்று செய்தியாளரிடம் ஜி.கே. வாசன் பேட்டியளித்து உள்ளார்.

சென்னை தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில அணித்தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் நடைப்பெற்று உள்ளது.

மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி.கே. வாசன்

கூட்டத்தின் முன்னதாக கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து கூறியதில், நேற்று காலை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் நேரடியாக சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தொலைபேசியில் பேசினேன்.

மேலும், இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அவர்களை சந்தித்தேன் நாளை மறுதினம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களையும் சந்தித்து பேசி இருக்கிறேன். ஏன் அவர்களிடம் பேசினேன் என்றால் இன்றைய நிமிடம் வரை அந்தக் கட்சிகளுடன் நான் நட்பு ரீதியாக பழகி வருகிறேன் என்பதால் என்றார்.

இந்த நிலையில், கூட்டணி குறித்து தமாக பொதுக்குழுவில் தெரிவிக்கப்படும் அதிகாரப்பூர்வமான முடிவுகள் எல்லாம் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தான் அறிவிக்கப்படும் இந்த மாதம் 12ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தாமாக செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற உள்ளது.

தமாகா கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு வாழ்த்து

அதிகாரப்பூர்வமான முடிவுகள் எல்லாம் பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தான் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் 10 தேதிக்குள் 5 முக்கிய கூட்டங்கள் நடைபெற உள்ளது அதில் முக்கிய கூட்டம் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஜனநாயக நாட்டில் வாக்காளர்கள் தான் எஜமானர்கள் அவர்கள் கொடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு அதனை பின்பற்றி தான் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றனர் அந்த வகையில் அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நடிகர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்தது போல நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் தான் தற்போது தமிழகத்தில் நிலவி வருகிறது. இரண்டரை வருட காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலான வகையில் நிறைவேற்றாத அரசு திமுக அரசு. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. வெளிப்படை தன்மை இல்லாத ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனக் கூறினார்.

Share This Article
Leave a review