சித்தானந்தா சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் வழிபாடு..!

2 Min Read

குரு சித்தானந்த சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் நடக்கிறது. புதுச்சேரி இ.சி.ஆர்., கருவடிக்குப்பத்தில் குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் 4-வது சோம வார்த்தையொட்டி நடந்த 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

இக்கோவிலில், கார்த்திகை மாத 4-வது சோமவாரத்தை முன்னிட்டு நாளை 11 ஆம் தேதி காலை 6:00 மணிக்கு 108 சங்கு பிரதிஷ்டை, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, சுவாமிக்கு காலை 9:00 மணி முதல் 11:00 மணிக்குள் 108 சங்காபிஷேகம், தீபாராதனை, இரவு 9:00 மணிக்கு, அர்த்தஜாம பூஜை நடக்கிறது. சென்னை மக்கள் வெள்ளத்தின் துயரத்தில் இருந்து மீண்டு வர புதுச்சேரி 186 ஆண்டு பழமை வாய்ந்த சித்தானந்தா கோவிலில் 108 சங்காபிஷேகம் செய்து பக்தர்கள் மனம் உருகி வேண்டினர். மேலும் ஹேவிளம்பி வருஷம் 1837 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீமத் குரு சித்தானந்தா சுவாமிகள் ஜீவன் முக்தி அடைந்தார்.

சித்தானந்தா சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் வழிபாடு

அந்த நன்னாளில் இருந்து சுமார் 186 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகளுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதனை தொடர்ந்து, 4-வது சோமவாரம் திங்கட்கிழமையை முன்னிட்டு மீண்டும் சென்னையில் இயல்பு நிலை திரும்பவும், இந்த நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்கவும், மற்றும் உலக நன்மை வேண்டி ஸ்ரீமத் குரு சித்தானந்த கோவிலில் நேற்று 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சங்கு பிரதிஷ்டை கணபதி ருத்ர ஹோமம் மஹா அபிஷேகம் ஆகியவை செய்யப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு தீபராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

சித்தானந்தா சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம் வழிபாடு

பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சங்குகளுக்கு நவதானியங்கள் மற்றும் ஒன்பது வகையான பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், துணை தலைவர் சசிக்குமார், செயலாளர் மதிவாணன், பொருளாளர் கதிரேசன், உறுப்பினர் அருள் மற்றும் தேவசேனாதிபதி குருக்கள் செய்திருந்தனர்.

Share This Article
Leave a review