
ரிஷிவந்தியத்தில் 1000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 1000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீமுத்தாம்பிகை சமேத ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆனி மாத பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்,அதுபோல் இந்த வருடத்திற்கான ஆனி மாத பிரமோற்ச திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 23ஆம் தேதி அன்று மாலையில் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா கோலகாலமாக தொடங்கியது,இதனைத் தொடர்ந்து தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காலை மற்றும் இரவு நேரத்தில் அருள்பாலித்தனர்,

ஆனி மாத பிரமோற்ச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மிக விமர்சையாக நடைபெற்றது, முன்னதாக மூலவர் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஸ்ரீமுத்தாம்பிகை அம்மன் மற்றும் விநாயகர் முருகன், தட்சிணாமூர்த்தி,பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்,இதனை தொடர்ந்து மகா தீபாரதனை பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது,
மங்கள வாத்தியம் முழங்க நாதஸ்வரம் இசைக்க ஸ்ரீமுத்தாம்பிகை அம்மன் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டு எழுந்தருளினார்,இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விண்ணை முட்டும் அளவுக்கு ஓம் நமச்சிவாயா, அரோகரா, அரோகரா என்ற பக்தி முழக்கங்கள் மேலிட திருத்தேரை வடம பிடித்து இழுத்தனர்,
இந்த சிறப்பு வாய்ந்த திருவிழாவில் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த தேர் திருவிழாவில் ரிஷிவந்தியம் காவல்துறையினர் சார்பில் சுமார் 150கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தீவிரமாக கண்காணித்து திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர்,.