ஏரிப்புறக்கரை கடற்பகுதியில் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது கடல் – மீனவர்கள் கவலை..!

2 Min Read

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் இன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை கடல் 100 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது.

- Advertisement -
Ad imageAd image

தற்போது மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ள நிலையில் விசைப்படகுகள் தவிர்த்து நாட்டு படகுகள் எனப்படும் பைபர் படகுகள் மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள் மட்டுமே தற்போது கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது கடல்

இந்த நிலையில் கடற்கரையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் வரை துறை வாய்க்கால் உள்ள நிலையில் மீனவர்கள் மீன் பிடித்து திரும்பும் பொழுது துறைமுக வாய்க்காலில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏரிப்புறக்கரை மீனவர்கள் மீன்பிடித்து விட்டு இன்று காலை 6 மணி அளவில் கரைக்கு திரும்பிய நிலையில் கடல் கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் உள்வாங்கி இருந்தது.

மீனவர்கள் கவலை

இதனால் படகை சேற்றில் இழுத்து வரும் நிலை ஏற்பட்டது. சில படகுகள் சேற்றில் சிக்கி படகை மீட்க முடியாமல் மீனவர்கள் போராடினர்.

பின்னர் 3 மணி நேரம் கழித்து மீண்டும் கடல் நீர் பெருக்கெடுத்து துறைமுக வாய்க்கால் வரை கடல் நீர் நிரம்பியதை அடுத்து மீனவர்கள் தங்களது படகுகளை மீண்டும் துறைமுக வாய்க்காலுக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் 100 மீட்டர் தூரம் உள்வாங்கியது கடல்

இரவு முழுவதும் கண் விழித்து கஷ்டப்பட்டு மீன் பிடித்து விட்டு திரும்பிய நிலையில் கடல் திடீரென உள்வாங்கியதால் நீண்ட போராட்டத்துக்கு பிறகு 3 மணி நேரம் தாமதமாக மீனவர்கள் கரை திரும்பியதால் மீனவர்கள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.

மீனவர்கள் கவலை

இதனால் கடல் உள்வாங்கும் நிலையிலும் படகை துறைமுக வாய்க்காலுக்கு செலுத்தும் வகையில் துறைமுக வாய்க்காலை ஆழப்படுத்தி தர வேண்டுமென இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share This Article
Leave a review