Rowdy Vasool Raja Murder 4 கல்லுரி மாணவர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது !

குற்றவாளிகளிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள், 9 கத்தி, 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2 Min Read

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேடு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட ரவுடி வசூல் ராஜா கொலை வழக்கில் 4 கல்லுரி மாணவர்கள் உள்ளிட்ட 10 நபர்களை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர் , இன்ஸ்டன்ட் ரவுடியாகும் ஆசையில் இந்த கொலையை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் . போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற முக்கியகுற்றவாளி ஜாஹீர் மற்றும் 3 கல்லூரி மாணவர்களுக்கு மாவுக்கட்டு .

- Advertisement -
Ad imageAd image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்த வசூல் ராஜா (வயது 40 ) . ரவுடி ராஜா மீது 4 கொலை உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பல் மருத்துவர் ஒருவரை கடிதலித்து வந்த ரவுடி வசூல் ராஜா அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார் . எந்த நேரம் வேண்டுமானாலும் போலீஸ் என்கவுண்டர் தன் மீது பாயலாம் என்று அஞ்சிய ரவுடி ராஜா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருந்தி வாழ முடிவெடுத்து காஞ்சிபுரம் காவல் அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு கடிதம் தாக்கல் செய்துவிட்டு . மேலும் எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்துள்ளார்.

வசூல் ராஜா

இந்நிலையில் தான் கடத்த 11 ஆம் தேதி (11 / 03 2025 ) வசூல் ராஜா காஞ்சிபுரம் மாநகராட்சி காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட திருக்காலிமேடு ரேஷன் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை வழிமறித்து நாட்டு குண்டுகளை வீசி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர் .

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் அவர்களின் உத்தரவுப்படி டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் தலைமையில் போலீஸார் கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் .3 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 10 பேர் கொண்ட கும்பல் இந்தக் கொலை சம்பவத்தில் பரத் (19), சிவா (19), திருக்காலிமேடு திலீப்குமார் (19), சூர்யா (19), சுரேஷ் (21), ஜாஹீர் (25), சுல்தான் (32), மோகனசுந்தரம் (18), சின்னகாஞ்சிபுரம் சரண்குமார்(20), ராணிப்பேட்டை, நெமிலி மணிமாறன்(19) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.

ரவுடி வசூல் ராஜா

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், 9 கத்தி, 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மேலும் இருவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகக்கின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Share This Article
Leave a review